புதரில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாத கடப்பா மற்றும் தேவராஜபுரம் பகுதிகளில் தாலுகா காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மலையில் இருக்கும் ஒரு புதரில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் மலையின் புதரில் வைத்து சாராயம் விற்பனை செய்த ஏமந்தகுமார் மற்றும் சிரஞ்சீவி ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்த 120 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்துள்ளனர்.