Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“கொரோனா தடுப்பு நடவடிக்கை” 300- க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகில் உள்ள 52 புதுக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. அந்த முகாமில் திருவிடச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கலைவாணி முன்னிலையில், திருவிடச்சேரி, வடவேர், சேங்காலிபுரம், சிமிழி, அன்னவாசல், மூலங்குடி மஞ்சக்குடி ஆகிய கிராமங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மேலும் சுகாதார ஆய்வாளர் விஸ்வநாதன் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டு பணியாற்றினர்.

Categories

Tech |