சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்வாய் பகுதியில் மாயாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாயாண்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.