Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் தேடி வந்த இடத்தில்…. மான்குட்டிக்கு நடந்த சோகம்…. தீயணைப்புத்துறையினரின் தீவிர முயற்சி….!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த மான் குட்டியை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மணக்காடு பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் உடுமலை வனச்சரக மலை அடிவாரப் பகுதிக்கு அருகில் கார்த்திகேயனுக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. அங்கு கார்த்திகேயன் தென்னை மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிணற்று பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது ஒரு மான் குட்டி தண்ணீர் தேடி வந்த இடத்தில் எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது.

இதனைப் பார்த்த கார்த்திகேயன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் இறங்கி கயிறு மூலமாக மான் குட்டியை உயிருடன் மீட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் சுப்பையா மற்றும் அன்பழகன் ஆகியோரிடம் தீயணைப்பு துறையினர் மான்குட்டியை ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து மான்குட்டியின் வயது 6 மாதம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். அதன்பின் வனத்துறையினர் மான்குட்டியை உடுமலை வனச்சரகத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

Categories

Tech |