டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் ஆடவருக்கான வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங் வெண்கல பதக்கம் வென்றுள்ளார் .
16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பிரவீன்குமார் வெள்ளிப்பதக்கமும், துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அவனி லெகாரா வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தினர். இந்த நிலையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது . இதில் இன்று நடைபெற்ற ஆடவர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார் .
இதில் நடந்த அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்த ஹர்விந்தர் சிங் இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கலந்து கொண்டார் .இதில் தென்கொரியாவை சேர்ந்த கிம் மின் சூவை 6-5 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார் .இதன் மூலமாக பாரா ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இல்லாத அளவில் இந்தியா 2 தங்கப் பதக்கம் உட்பட 13 பதக்கங்களை வென்றுள்ளது.