எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லாபம். இது மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் கடைசி படமாகும். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜெகபதி பாபு, கலையரசன், சாய் தன்ஷிகா, பிரித்விராஜன், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் 7C’s என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் லாபம் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வருகிற செப்டம்பர் 9-ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.