ஆடு மேய்த்து கொண்டிருந்த போது கார் மோதி முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குயவன்குளம் கிராமத்தில் சாமிகண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக ஆடு மேய்த்து கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் சாமிகண்ணுவின் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.