Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோபத்தில் சென்ற மனைவி…. கண்டக்டரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தனியார் பேருந்து கண்டக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எரமநாயக்கன் பட்டி பகுதியில் சந்தன கோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சந்தன கோபால் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபத்தில் பூங்கொடி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சந்தன கோபால் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |