ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் ஆயுள் தண்டனை பெற்று வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. ஆனால் ஆளுநர் இன்று வரையில் எந்த முடிவும் எடுக்காமல் மெளனம் காத்து வருகிறார். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்களும், குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தன்னுடைய பேரறிவாளன் தன்னுடைய ஆயுள் தண்டனை நிறுத்தி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் ராஜிவ் கொலைக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றும் சொல்லப்பட்டது. இதையடுத்து பேரறிவாளன் மனுவை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம் மனுவை 5 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் ஒப்புதல் அளித்துள்ளது.