Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! சுறுசுறுப்பாக இருப்பீர்கள்….! லாபம் கிடைக்கும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

இன்றைய நாள் சுறுசுறுப்பாக இயங்க கூடிய நாளாக இருக்கின்றது. குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். அதிகாரப் பதவிகள் கிடைக்கும். பெரியவர்களின் நட்பு கிடைக்கும். வெகு நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி விடுவீர்கள். தைரியமாக சில முடிவுகள் எடுக்கக்கூடும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யக் கூடிய எண்ணங்கள் இருக்கும். கணவன்-மனைவிக்கிடையே மனஸ்தாபங்கள் வந்தாலும் நீங்கிவிடும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து சில விஷயங்களை கையாள்வது நல்லது. ஆக்கபூர்வமான சிந்தனை இருக்கும். நெடு நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி விடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபங்கள் அதிகரிக்கும். தொட்டது துலங்கும். தொழிலுக்காக கொஞ்சம் அலைய வேண்டியிருக்கும். அது முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். புதிய தொழில் தொடங்க போட்ட திட்டங்கள் சிறப்பை கொடுக்கும்.

எதிர்பார்த்த கடனுதவி கண்டிப்பாக கிடைக்கும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. சந்திராஸ்டமம் முடியாததால் மனக்குழப்பம் இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். வாகனத்தில் செல்லும்போது பொருமையாக சென்று வரவேண்டும். நிதானத்தை மட்டும் கடைபிடிக்க வேண்டும். பணப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். உயர்வும் தாழ்வும் காணப்படும். காதல் கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தும். கொஞ்சம் விட்டுக் கொடுக்க வேண்டும். மாணவர்கள் அதிகப்படியான பொறுப்புகள் இருக்கும். கல்வி மீது அக்கறை இருக்கும். மாணவர்கள் சில செயல்களை கவனத்துடன் செய்ய வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   4 மற்றும் 6                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு

Categories

Tech |