Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்….! செலவுகள் அதிகரிக்கும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! கண்டிப்பாக எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

இன்று எதிர்ப்புகள் அடங்கும் நாள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் ஏற்படும். மனைவி வழியில் நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின்  அறிமுகம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் அறிமுகம் கிடைக்கும். தன்னம்பிக்கை கூடும். கடன் பிரச்சனைகள் அதிகரிக்க சேமிப்பு குறையும். கடன் பிரச்சனைகளை கவனமாக கையாள வேண்டும். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் இழுபறியான நிலை நீடிக்கும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவு அதிகரிக்கும். கடனுதவிகள் கண்டிப்பாக கிடைக்கும். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். குடும்ப தேவைகள் இருந்து கொண்டே இருக்கும். எவ்வளவு செலவுகள் செய்தாலும் தேவைகள் குறையாது. கண்டிப்பாக எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பொறுமையாக இருந்து எதையும் செய்தால் வெற்றி மேல் வெற்றி ஏற்படும்.

கணவன் மனைவி இருவரும் பாசத்தை வெளிப்படுத்துவீர்கள். பிரச்சனையில் இருந்து விடுபட்டு ஓரளவு நன்மையை ஏற்படுத்திக் கொள்வீர்கள். ஒருவரையொருவர் புரிந்து கொள்ளக் கூடிய சூழல் இருக்கும். அதனால் பெரிய அளவில் பிரச்சினைகள் இருக்காது. மாணவர்கள் எதையும் சிறப்பாக செய்யக்கூடிய சூழல் இருக்கும். மென்மேலும் உங்கள் வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல முடியும். குழப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காதல் கொஞ்சம் கஷ்டத்தை ஏற்படுத்தும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் எந்தவித பிரச்சனையும் இருக்காது. இன்று  முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு

Categories

Tech |