செல்போன் திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு கீர்த்தி ஜெகன் என்ற மகள் இருக்கின்றார். இவர் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பை பயின்று வருகிறார். இதனை அடுத்து கீர்த்தி ஜெகன் செல்போனை சார்ஜில் போட்டு ஜன்னலில் வைத்துள்ளார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து செல்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து கீர்த்தி ஜெகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அருண் குமார் என்பவரை சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளனர். அதன்பிறகு செல்போனை திருடியது அருண்குமார் என்பதை காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதன் பின்னர் செல்போனை மீட்ட காவல் துறையினர் அருண் குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.