Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொத்தனார்களுக்கு இடையே தகராறு….. கைது செய்யப்பட்ட இருவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கொத்தனாரை அரிவாளால் வெட்டிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆவியூர் கிராமத்தில் கொத்தனாராக செல்வ அதிபதி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவரது தாய் மாமனான அம்மையப்பன் என்பவர் கோவையில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கர்ணன் மற்றும் லிங்கேஸ்வரன் ஆகியோர் அம்மையப்பனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து செல்வ அதிபதிக்கும் கர்ணன் மற்றும் லிங்கேஸ்வரனுக்கும் இடையே இது குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது.

அதன் பிறகு கர்ணன் மற்றும் லிங்கேஸ்வரன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செல்வ அதிபதியை சரமாரியாக வெட்டி சென்றுள்ளனர். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் செல்வ அதிபதியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கர்ணன் மற்றும் லிங்கேஸ்வரன் மீது வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |