Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் கனமழை…. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு…. விவசாயிகள் மகிழ்ச்சி….!!

தொடர்ந்து பெய்த கனமழையால் தடுப்பு அணைகள் நிரம்பி வழிவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாராயணபுரம், அலசந்தாபுரம் மற்றும் திம்மகெடா நீர்வீழ்ச்சி பகுதிகளில் தொடர் கனமழையால் நீர்வீழ்ச்சியில் உருவாகும் காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து பூதனாற்றில் கலந்து வருகிறது. இந்நிலையில் நாராயணபுரம் மற்றும் திம்மாம்பேட்டை மண்ணாற்றின் வழியாக ஆவார குப்பம் பாலாற்றில் கலந்து பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனையடுத்து மழையால் அலசந்தராபுரம், நாராயணபுரம், கொடையாஞ்சி, அம்பலூர், திம்மாம்பேட்டை பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றதினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம் குப்பம் பகுதிகளில் பெய்த கனமழையால் புல்லூர் தடுப்பணை மீண்டும் நிரம்பி வழிகின்றது. இதனால் அப்பகுதியில் வசிக்கின்ற மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அந்த அணைக்கு வந்து குளித்து செல்கின்றனர். மேலும் தடுப்பு அணை நிரம்பி வருவதாலும் மற்றும் பாலாற்று பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |