போலீசார் நடத்திய வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் வைத்திருந்த 2 பேரை கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அக்ரஹாரம் பகுதியில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சின்னமனூரை சேர்ந்த நாகராஜ், கரட்டுபட்டியை சேர்ந்த பாரதி ஆகிய இருவரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட 50.000 ரூபாய் மதிப்புள்ள 1,350 லாட்டரி சீட்டுகள் இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நாகராஜ் மற்றும் பாரதி மீது வழக்குபதிவு செய்து கைது செய்து லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் லாட்டரி சீட்டுகள் எங்கிருந்து கிடைத்தது என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.