Categories
மாநில செய்திகள்

கொரோனா அறிகுறி இருக்கா…? அப்ப பள்ளிக்கு வர வேண்டாம்… வெளியான அறிவிப்பு…!!!!

காய்ச்சல், இருமல், சளி, வாந்தி போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் பள்ளிகளுக்கு வரவேண்டாம் என்று மாவட்ட கல்வி நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த காரணத்தினால் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. சுழற்சிமுறையில் மாணவ மாணவியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். பள்ளி திறந்த முதல் நாளிலேயே கடலூரில் பணிக்கு வந்த ஆசிரியை ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு தொற்று உறுதியானது. இந்நிலையில் தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் தரப்பில் புதிய அறிக்கை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதில் காய்ச்சல், இருமல், உடல்வலி, வாந்தி, சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அருகில் உள்ள மருத்துவ மையங்களில் பரிசோதனை செய்து உடல்நிலை சரியான பின்பு பள்ளிக்கு வந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |