மஞ்சள் விலை உயர்ந்து வருவதால் சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் மஞ்சளுக்கு தனி சிறப்பு இருக்கின்றது. இந்நிலையில் காலிங்கராயன் வாய்க்கால் பாசனம் பகுதிகளில் தொடர்ச்சியாக 10 மாதத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதால், அங்கு பிரதானம் பயிராக மஞ்சளை சாகுபடி செய்கின்றனர். இதற்கு கடந்த சில வருடங்களாக சரியான விலை கிடைக்காததால் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. இந்நிலையில் மஞ்சளுடைய விலையானது சற்று உயர்ந்து குவிண்டாலுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனையானது. இதனால் விவசாயியினர் பல வருடங்களாக இருப்பு வைத்து இருந்த மஞ்சளை விற்றுள்ளனர்.
இதனையடுத்து நடப்பாண்டில் விவசாயிகள் மஞ்சளை பயிரிட அதிக ஆர்வம் செலுத்தி வந்தனர். இதுகுறித்து மஞ்சள் வணிகர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியபோது, கடந்த வருடம் மஞ்சள் சாகுபடி 6 ஆயிரம் ஏக்கருக்கு குறைவாக இருந்தது. ஆனால் தற்போது விலை உயர்வு காரணமாக இந்த ஆண்டு 6 ஆயிரத்து 800 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்து வருகின்றனர். எனவே தற்போது மஞ்சளுக்கு விலை குறைவாக காணப்பட்டாலும் மீண்டும் உயருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. அதன்பின் அணையில் தண்ணீர் இருப்பு அதிகமாக இருப்பதால் வாய்க்காலில் பாசனத்திற்கு திறக்கப்பட்டு இருக்கின்றது. ஆகவே நீர்வளம் இருப்பதால் மஞ்சள் சாகுபடி பரப்பளவு அதிகரிக்க தொடங்கி இருப்பதாக சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.