கொரோனா காலகட்டத்தில் சுகாதார வல்லுனர்களின் எச்சரிக்கையையும் மீறி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய அந்நாட்டின் பிரதமருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்த நிலையில் தற்போது அவர் அதிரடியான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாகாலகட்டத்தில் ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளது. ஆனால் இதற்கு எதிராக பிரதமரிடம் சுகாதார வல்லுனர்கள் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்கள்.
இருப்பினும் பிரதமர் அதனை பொருட்படுத்தாமல் செயல்பட்டதால் மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு 26 சதவீதம் மட்டுமே தற்போது உள்ளது. இதனையடுத்து செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி ஜப்பான் நாட்டில் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியினுடைய தலைவரை தேர்வு செய்வது தொடர்பான தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஜப்பான் நாட்டின் பிரதமரான யோசிஹைட் அதிரடியான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது தான் வருகின்ற 26ஆம் தேதி நடைபெறவுள்ள புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று தெரிவித்துள்ளார். இவருடைய இந்த அதிரடியான தகவலினால் பிரதமர் யோசிஹைட் இந்த மாத இறுதிக்குள் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய போவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.