கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு என்பது சாத்தியமற்றது என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருந்தாலும், கேரளா மராட்டியம் போன்ற மாநிலங்களில் தொற்று இன்னும் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகைக்கு பிறகு கொரோனா தொற்று தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது சாத்தியமற்றது என தெரிவித்துள்ளார்.
மேலும் தனிமைப்படுத்தலை மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். நேற்று உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடன் கலந்தாலோசனை செய்த முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளதாவது கொரோனா அதிகரித்து வரும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார். மேலும் தனிமைப்படுத்துதலை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார். இரண்டு வாரங்களுக்குள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதே இதன் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.