ஆப்கனை கைப்பற்றிய தலிபான்களுடன் பாகிஸ்தான் நாட்டின் ராணுவ வீரர்கள் இருந்ததை உறுதி செய்வது தொடர்பாக எந்தவித ஆதாரமும் இல்லை என்று அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றி அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து ஆப்கனை கைப்பற்றிய தலிபான்களுடன் ஒன்றாக சேர்ந்து அந்நாட்டில் சண்டையிடுவதற்காக பாகிஸ்தான் அரசாங்கம் தங்களது ராணுவ படை வீரர்களை அங்கு அனுப்பி வைத்ததாக பாகிஸ்தான் நாட்டின் மீது புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமாக செயல்படும் பென்டகன் இது தொடர்பான முக்கிய தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. அதாவது பாகிஸ்தான் அரசாங்கம் தங்களது ராணுவ படை வீரர்களை தலிபான்களுக்கு உதவி செய்யும் விதமாக அவர்களுடன் அனுப்பி வைத்ததை உறுதி செய்வதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.