பெண்களை எவ்வாறு பாலியல் பலாத்காரம் செய்வது என்பதை நடித்துக்காட்டிய குற்றவாளி ஒருவரது நிகழ்ச்சியை டிவியில் ஒளிபரப்பிய தொகுப்பாளருக்கு நீதிமன்றம் அதிரடியான தண்டனை ஒன்றை பிறப்பித்துள்ளது.
ஐவரிகோஸ்ட் என்னும் நாட்டில் எவ்ஸ் டி எம் பெல்லா என்பவர் டிவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார். இவர் பாலியல் குற்றவாளி ஒருவரை வைத்து டி.வி நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பியுள்ளார். அதாவது பெண்களை எவ்வாறு பாலியல் பலாத்காரம் செய்வது என்பதை ஒரு பொம்மையை படுக்க வைத்து அதன் மூலம் அந்த பாலியல் குற்றவாளி நடித்து காண்பித்துள்ளார்.
இதற்கு டிவி நிகழ்ச்சியின் தொகுப்பாளரான எவ்ஸ் டி எம் பெல்லா உதவி செய்துள்ளார். இந்த டி.வி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி அனைவரது இடத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இவருக்கு எதிராக கிட்டத்தட்ட 50,000 பேர் கையெழுத்திட்டு அபித்ஜான் என்னும் கோர்ட்டில் வழக்கை தொடர்ந்துள்ளார்கள். இதனை விசாரித்த அபித்ஜான் நீதிமன்றம் டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளரான பெல்லாவுக்கு 12 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.