Categories
உலக செய்திகள்

சீனா தான் எங்களின் முக்கிய கூட்டாளி..! தலிபான்கள் முக்கிய அறிவிப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

தலிபான் பயங்கரவாதிகள் சீனாவை தங்களது முக்கிய கூட்டாளியாக கருதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதோடு தற்போது சீனா தங்களின் முக்கிய கூட்டாளி என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். மேலும் பொருளாதார ரீதியாக ஆப்கானிஸ்தானை வலுபடுத்துவதற்கு சீனா தங்களுக்கு உதவும் என்று நம்புவதாக கூறிய தலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிபஹுல்லா முஜாஹித் சீனா தங்களின் முக்கிய கூட்டாளி என்றும் கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் நிதி வழங்கவும், பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் சீனா தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் சீனாவின் உதவியுடன் ஆப்கானிஸ்தானில் உள்ள வளமான சுரங்கங்களை மீண்டும் செயல்பட வைக்க முடியும் என்று கூறியுள்ளார். மேலும் தங்களது சுரங்க தயாரிப்புகளை உலகமெங்கிலும் உள்ள சந்தைகளுக்கு சீனாவின் மூலமாக எடுத்துச் செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் சீனாவின் “ஒன் பெல்ட், ஒன் ரோடு” முயற்சிக்கும், சீனாவை ஆப்பிரிக்கா ஆசியா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் முயற்சிக்கும் தாங்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும் ஜபிபஹுல்லா முஜாஹித் கூறியுள்ளார்.

Categories

Tech |