Categories
உலக செய்திகள்

தலீபான்களின் வாக்குறுதிகள்…. கவலை தெரிவித்த பிரபல நாடு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

தலீபான்கள் “இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நாங்கள் குரல் கொடுப்போம்”  என்று வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் ஆட்சி பிடியில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக தலீபான்கள் ஆப்கானிஸ்தான் மண்ணை இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபட பயன்படுத்திவிடுவார்களோ? என இந்தியா கவலை தெரிவித்து வருகின்றது. இந்த நிலையில் தலீபான்கள் வெளியிட்ட அறிக்கை தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் தலீபான்கள் குறிப்பிட்ட நாடுகளுக்கு எதிராக தீவிரவாத செயல்களை நடத்தும் திட்டம் எங்களிடம் இல்லை என விளக்கம் அளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து தலீபான்களின் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொழுது கூறியதாவது “நாங்கள் ஒரு இஸ்லாமியராக காஷ்மீர் மற்றும் இந்தியா மட்டுமல்ல உலகிலுள்ள எல்லா நாட்டையும் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது.

அதன்பின் இஸ்லாமியர்கள் உங்களுடைய மக்கள் என அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம். மேலும் உங்களுடைய சட்டத்தின்படி அவர்களுக்கும் சமமான உரிமைகள் வழங்க ஆதரவளிப்போம்” என கூறியுள்ளார். அதாவது ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை தொடர்ந்து தலீபான்கள் வெளியிட்ட கருத்துக்கு தற்போதைய கருத்துக்கும் பெரிய முரண்பாடு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின் தலீபான்கள் கூறியதாவது “காஷ்மீர் இரு நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதில் நாங்கள் தலையிட மாட்டோம்” என கூறியிருந்தார்கள்.

அதேபோல் தலீபான்களின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கடந்த வியாழக்கிழமை அன்று கூறியதாவது “ஆப்கானிஸ்தானில் இனிமேல் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்காது” என உறுதியளித்துள்ளார். இந்நிலையில் கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டலை தலீபான்களின் பிரதிநிதி ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தோஹாவில்  சந்தித்து பேசியுள்ளார். இதுவே தலீபான்கள் நடத்தும் முதல் அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சந்திப்பில் கூட இந்தியாவிற்கு எதிராக தீவிரவாத செயல்களை நடத்த ஆப்கானிஸ்தான் மண் பயன்பட்டுவிடக்கூடாது என்பதே இந்திய தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |