சீன அரசாங்கம், ஆப்கனை கைப்பற்றிய பயங்கரவாதிகளின் மிகவும் நெருக்கமான கூட்டாளி என்று தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் அமைக்கும் அரசாங்கத்திற்கு சீனா தங்களது ஆதரவை அளித்துள்ளது.
இந்நிலையில் சீன அரசாங்கம் தங்களது மிகவும் நெருக்கமான கூட்டாளி என்று தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
மேலும் தலிபான்கள் கைப்பற்றிய ஆப்கனிலுள்ள சுரங்கங்களை சீனாவின் உதவி கரத்துடன் மீண்டும் செயல்பட வைத்து அதன்மூலம் உருவாக்கப்படும் பொருட்களை சீனா உலக சந்தைகளுக்கு எடுத்துச் செல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.