Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் கனமழை…. 7௦ மில்லி மிட்டர் பதிவு…. சாலையில் தேங்கும் தண்ணீர்….!!

வளிமண்டல சுழற்சி காரணமாக பெய்த கனமழை அதிகபட்சமாக 70 மில்லி மீட்டர் அளவு பதிவாகி உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததினால் ஒரு சில பகுதிகளில் மிதமான கனமழை பெய்து வந்துள்ளது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் 92.12 டிகிரி வெயில் பதிவாகி இருந்த நிலையில் தற்போது வளிமண்டல சுழற்சி காரணத்தினால் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கனமழை பெய்ய தொடங்கியதால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி சாலையில் பெருக்கெடுத்து ஓடி உள்ளது.

இதனை அடுத்து இம்மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. அதன்பின் 24 மணி நேரத்தில் அதிகபட்ச அளவாக கச்சேரியில் 70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பின்னர் குறைந்தபட்ச அளவாக வடக்கில் 4.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. எனவே இம்மாவட்டத்தில் சராசரியாக 20.38 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Categories

Tech |