Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு வேண்டும்…. பொதுமக்கள் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

குடிநீர் வழங்க வேண்டும் எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள கார்மாங்குடி ஊராட்சிக்குட்பட்ட 6-வது வார்டில் 255-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பாக பொது குழாய்கள் மூலம் தினமும் குடிநீர் விநியோகம் செய்து வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதினால் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வரவில்லை.

இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் கூடி தங்களது பகுதியில் உடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து தருமாறு கண்டன கோஷம் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அளித்த உறுதியின் காரணத்தினால் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |