Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான சுவையில் நெத்திலி 65 செய்வது எப்படி …

நெத்திலி 65

தேவையான பொருட்கள் :

நெத்திலி மீன் –  1/2 கிலோ

சோளமாவு – 2 டேபிள் ஸ்பூன்

இஞ்சிபூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

அரிசிமாவு – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

மிளகாய் தூள் – காரத்திற்கேற்ப

மஞ்சள் தூள் –  சிறிது

எலுமிச்சை – 1

நெத்திலி  65க்கான பட முடிவுகள்

செய்முறை :

கிண்ணத்தில்  சோளமாவு , இஞ்சிபூண்டு விழுது , அரிசிமாவு , உப்பு , மிளகாய் தூள் , மஞ்சள் தூள் சேர்த்து கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து 4 சொட்டுகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும் . பின்னர் நெத்திலி மீனுடன் எலுமிச்சை சாறு கலந்து, மசாலா கலவையை சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊறவிட்டு எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால்  சுவையான நெத்திலி 65 தயார் !!!

 

Categories

Tech |