Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. வாங்குவதற்கு வியாபாரிகள் வரவில்லை…. பாதிக்கப்பட்ட தொழில்….!!

மாட்டுச்சந்தையில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக விற்பனை பாதிக்கப்பட்டது .

ஈரோடு மாவட்டத்திலுள்ள சீனாபுரத்தில் நடைபெற்ற மாட்டுச்சந்தையில் காரிமங்கலம், முத்துநாயக்கன்பட்டி, மோர்ப்பாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு 80 விர்ஜின் எனும் கலப்பின கறவை மாடுகள் விற்பனைக்கு வந்தது . மேலும் 120 இதே இனத்தை சேர்ந்த கிடாரி கன்றுகள் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து 50 சிந்து மற்றும் ஜெர்சி வகை கறவை மாடுகளும், 120 இதே இனத்தை சேர்ந்த கிடாரி கன்றுகளும் விற்பனைக்கு வரப்பட்டது.

இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருவதனால் மாடுகளை வாங்கவோ, விற்கவோ வியாபாரிகள் வராமல் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மொத்தம் 100 மாடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதில் விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று 35 ஆயிரம் ரூபாயிலிருந்து 40 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அதன்பின் 25 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை இதே இனத்தை சேர்ந்த கிடாரி கன்றுகள் விற்பனையானது. மேலும் சிந்து மற்றும் ஜெர்சி வகை பசுமாடு ஒன்று 25 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனையானது. இதே வகை கிடாரி கன்று ஒன்று 10 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு மொத்தம் 32 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.

Categories

Tech |