Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இனி நடக்கக் கூடாது…. வேறு தொழில் செய்ய வேண்டும்…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை….!!

சிலிண்டரை பயன்படுத்தி சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதை தடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சித்தலூர் கிராமத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருப்பதினால் சிலர் சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் சாராயம் காய்ச்சும் தொழிலை தொடர்ந்து நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது. அதன்பின் இவர்கள் நவீன முறையில் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி இரும்பு பேரலில் அடுப்பு வைத்து சாராயம் காய்ச்சி வந்ததாகத் தெரியவந்துள்ளது. பின்னர் சிலர் குறைந்த அளவுடைய சாராயத்தை குடிசைத் தொழில் போல வீட்டிலே குக்கரில் வைத்து காய்ச்சி குடிநீர் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து டாஸ்மாக் கடைகளில் எத்தனை வகையான மதுபானங்கள் கிடைத்தாலும் சாராயத்திற்கு என்று தனி பிரியர்கள் இருந்து வருகின்றனர். பின்னர் மலை பகுதிகளில் சாராயம் காய்ச்சுபவர்க்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதில் சாராயம் காய்ச்சுபவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர்களை திருத்தி வேறு தொழில்களை செய்வதற்கு அரசு பல உதவிகளை வழங்கி வருவது குறித்து சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாராயத்தை ஒழிக்க மாவட்ட காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Categories

Tech |