Categories
கிரிக்கெட் விளையாட்டு

NZ VS BAN 2-வது டி20 : 4 ரன்கள் வித்தியாசத்தில் …. வங்காளதேச அணி திரில் வெற்றி…!!!

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி திரில் வெற்றி பெற்றது .

நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி நேற்று டாக்காவில் நடந்தது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர்களான முகமது நசீம் 39 ரன்னும் , லித்தன் தாஸ் 33 ரன்னும்  கேப்டன் மக்மதுல்லா 37 ரன்னும்  எடுத்தனர் . நியூசிலாந்து தரப்பில் ராச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டும் , அஜாஸ் படேல், மெக்கன்சி மற்றும் பென்னட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும்  கைப்பற்றினர்.

இதன்பிறகு 142 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு நியூசிலாந்து அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்பிறகு களமிறங்கிய கேப்டன்  டாம் லாதம் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார் .இறுதியாக நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது .இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்காளதேச அணி 2-0  என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

Categories

Tech |