Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சந்தேகமா இருந்துச்சு…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் மற்றும் பாணவரம் கூட்டுரோடு பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டைகளுடன் சந்தேகப்படும் படி வந்த 2 வட மாநில வாலிபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அதில் அவர்கள் சாக்கு மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்டிருக்கும் குட்கா, ஹான்ஸ், பான்பராக் போன்ற புகையிலைப் பொருட்களை கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்த போது அவர்கள் இருவரும் வட மாநிலத்தில் வசிக்கும் நீமாரா மற்றும் சுரேஷ்குமார் என்பதும், இவர்கள் 2 பேரும் குடோன் வைத்து புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் குடோனுக்கு சென்று பார்த்த போது ஒரு டன் அளவுக்கு குட்கா மற்றும் பான்பராக் போன்ற புகையிலை பொருட்கள் இருந்துள்ளது.

அதனை பறிமுதல் செய்ததோடு குடோனில் வேலை பார்த்து கொண்டிருந்த லட்சுமணன், கால்ராம், உரிமையாளர் கோவிந்தராம் ஆகிய 3  பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தடை செய்யப்பட்டிருந்த புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வைத்திருந்த 7 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், புகையிலைப் பொருட்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |