Categories
உலக செய்திகள்

பயண தொடர்பில் புதிய விதி…. செப்டம்பரில் அமலுக்கு வரும்…. தகவல் வெளியிட்ட பிரபல நாட்டு அரசு….!!

பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை ஜேர்மனியில் பயன்படுத்த புதிய விதிமுறையை அந்நாட்டு அரசு நடைமுறைக்கு கொண்டுவர உள்ளது.

பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஜேர்மனியில் அல்லது ஏதாவது ஒரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் பயன்படுத்த புதிய விதிமுறையை அந்நாட்டு அரசு நடைமுறைக்கு கொண்டுவர உள்ளது. அதாவது பிரெக்சிட் மாற்றக்காலத்தைத் தொடர்ந்து ஜேர்மனிக்கும் பிரித்தானியாவுக்கும் இடையேயான பயண தொடர்பில் பல மாற்றங்களை பிரித்தானியா அரசு  செய்து வருகின்றது. அந்த வகையில் பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஜேர்மனியில் பயன்படுத்தப்பட வேண்டுமெனில் ‘UK’ ஸ்டிக்கர் ஒன்றை வாகனங்களில் ஒட்டியிருக்கவேண்டும் என்னும் புதிய விதிமுறையை பிரித்தானியா அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த விதிமுறை நடப்பு மாதம் 28 ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பயண தொடர்பில் விதிக்கப்பட்ட புதிய விதிமுறை குறித்து பிரித்தானியா அரசு கூறியதாவது “வாகனங்களில் இதற்கு முன் ‘GB’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. தற்போது அதை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ‘UK’ என்ற ஸ்டிக்கரை பயன்படுத்த வேண்டும்” என அறிவித்துள்ளது.

Categories

Tech |