Categories
உலக செய்திகள்

“வானில் துப்பாக்கியால் சுட்டு தலீபான்கள் கொண்டாட்டம்!”.. 17 பேர் உயிரிழப்பு.. மருத்துவமனை வெளியிட்ட தகவல்..!!

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் தலிபான்கள் வெற்றியை கொண்டாடும் விதமாக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காபூல் நகரத்தில் தலிபான்கள் நேற்று இரவில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியுள்ளனர். அதாவது, PANJSHIR என்ற பள்ளத்தாக்கை கைப்பற்றியதையும், முல்லா பராதர், நாட்டின் புதிய அரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையும் தலிபான்கள், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியுள்ளனர்.

அப்போது, துப்பாக்கி சூடு சத்தத்தால் அங்குள்ள பெரியவர்களும், குழந்தைகளும் இரவில் பயந்து நடுங்கியிருக்கிறார்கள். எனவே, இனிமேல் கொண்டாட்டத்திற்காக வானில் துப்பாக்கியால் சுடுவது தடை விதிக்கப்படுகிறது என்று தலீபான்களின் தலைமை அறிவித்திருக்கிறது. இந்நிலையில், நேற்றிரவு நடந்த துப்பாக்கி சூடு கொண்டாட்டத்தின்போது 17 நபர்கள் உயிரிழந்ததாகவும், 41 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் காபூலில் இருக்கும்  மருத்துவமனைகள் தகவல் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |