பிரித்தானியா மகாராணியார் இறந்த பின் என்னென்ன செய்யப்படும் என்பது குறித்து திட்டமிடப்பட்டிருந்த ரகசிய தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.
இந்த உலகம் தற்போது உயிரோடு இருப்பவர் இறந்தபின் அவர்களுக்கு என்னென்னலாம் செய்யலாம் என்பது குறித்து திட்டமிட்டு கொண்டிருக்கிறது. அந்த வகையில் பிரித்தானிய மகாராணியார் உயிருடன் இருக்கும் போதே அவர் இறந்தபின் என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது பிரித்தானிய மகாராணியார் இறந்தபின் செய்யப்படும் நிகழ்ச்சிகள் குறித்து திட்டமிட்டிருந்த ரகசிய தகவல்களை தற்போது ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. இந்த ரகசிய திட்டத்தின் பெயர் ‘Operation London Bridge’எனவும் அவர் இறந்த நாள் ‘D-Day’ என்றும் கூறப்படுகிறது. அந்த ரகசிய திட்டத்தில் குறிப்பிடப்பட்டவை “மகாராணியார் இறந்ததும் முதலில் பிரித்தானியா பிரதமருக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும்.
இதனைத்தொடர்ந்து ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும் கொடிகள் அனைத்தும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். பின்னர் மகாராணியாரின் இணையதளம் கருப்பாக மாற்றப்படும். அதன்பின் பிரித்தானியா பிரதமர் தன் வீட்டின் முன்பு மகாராணியாரின் மரணம் குறித்து உரையாற்றுவார். இறுதியாக மாலை 6 மணி செய்தியில் இளவரசர் சார்லஸ் மகாராணியார் மரணம் குறித்து உரையாற்றுவார். மேலும் மகாராணியார் இறந்ததற்கு பின் இளவரசர் சார்லஸ் மன்னராக முதல் நாள் அறிவிக்கப்படுவார். அடுத்து மகாராணியாரின் உடல் பக்கிங்காம் அரண்மனைக்கு இரண்டாம் நாள் கொண்டு செல்லப்படும். இதனைத்தொடர்ந்து மூன்றாம் நாள் இளவரசர் சார்லஸ் பிரித்தானிய பயணம் மேற்கொள்வார்.
அதன்பின் மகாராணியாரின் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகைக்கு ஐந்தாம் நாள் கொண்டு செல்லப்படும். அதாவது ஆறு முதல் ஒன்பதாம் நாள் வரை மகாராணியாரின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். இறுதியாக வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் மகாராணியாரின் இறுதிசடங்கு ஆராதனையும் விண்ட்சர் கோட்டையில் அவரது உடல் தகனமும் பத்தாம் நாள் நடைபெறும்” என திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு மகாராணியாரின் மரணம் குறித்து ரகசிய தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. இந்த செய்தியை கேட்டு அரண்மனை அலுவலர்கள் மற்றும் அரண்மனை வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் வருத்தத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.