புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போதைய அதிமுக ஆட்சியில் மாவட்டம் பிரிக்கப்பட்டதன் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது..
தேர்தல் நடத்தபடாத 9 மாவட்டங்களுக்கும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. இதையடுத்து தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் ( tnsec.tn.nic.in ) வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களது பெயர் வார்டு உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்..