பெய்துவரும் கனமழையினால் பவானிசாகர் அணைக்கு தொடர்ச்சியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணை என்ற பெருமை கொண்ட பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்பட்டு, நீர்பிடிப்பு கொள்ளளவு 32.8 டி.எம்.பிசி ஆகும். இதனையடுத்து நீலகிரி மலைப்பகுதியிலிருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்கிவருகிறது. இந்த பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. இதைத்தவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது.
இந்நிலையில் இந்த அணையின் நீர்நிலை பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாகி இந்த அணைக்கு வினாடிக்கு 2.984 கன அடி நீர் வந்திருக்கின்றது. அதன்பின் தண்ணீர் 4,883 கன அடி அதிகரித்தபோது அணையின் நீர்மட்டம் 102 அடி இருந்தது. எனவே அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு வினாடிக்கு 422 கன அடி நீரும், உபரி நீராக வினாடிக்கு 4,362 கன அடி நீரும் சேர்த்து பவானி ஆற்றில் மொத்தம் வினாடிக்கு 4,790 கனஅடி நீர் திறக்கப்பட்டது.