தலிபான்களின் செய்தி தொடர்பாளர், எங்களின் கலாச்சாரத்தையும் பெண்களின் உரிமைகள் குறித்தும் தலையிடக்கூடாது என்று அமெரிக்காவை எச்சரித்திருக்கிறார்.
தலிபான்களின் செய்தி தொடர்பாளரான Suhail Shaheen, அமெரிக்காவின் ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதால் பெண்களின் உரிமைகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. எனினும், பர்தா அணியாமல் பெண்கள் கல்வி கற்கலாம் என்ற மேலை நாடுகளின் எண்ணத்தை எதிர்க்கிறேன்.
இது எங்களின் கலாச்சாரத்தை மாற்றக்கூடிய செயல். எங்களது கலாச்சாரத்தில், பெண்கள் கல்வி கற்கும் போதும், பணி செய்யும் போதும் பர்தா அணிந்திருக்க வேண்டும். அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டின் நலன்களுக்காக நாம் எப்படி நேர்மையாக ஒன்றாக பயணிக்க வேண்டும் என்பதில் எங்களின் கவனம் இருக்கிறது.
பெண்களுக்கான கல்வி மற்றும் பணி போன்றவற்றில் பிரச்சனைகள் இல்லை. நாங்கள் உங்களது(அமெரிக்கா) கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் என்று நினைக்கவில்லை. எனவே நீங்களும் எங்களின் கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் என்று நினைக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.