Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை வழக்கு…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

நண்பனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள நிலக்கரி சுரங்கம் முட்புதரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக வாலிபர் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இந்நிலையில் இது பற்றி வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் இறந்தவர் ஐ.டி.ஐ நகர் பகுதியில் வசிக்கும் அருண்குமார் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அதே பகுதியில் வசிக்கும் தேவா என்பவர் அவரை கொலை கொலை செய்ததாக காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து தேவாவை தேடி வந்த நிலையில் அவர் ரயில் நிலையம் அருகாமையில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து தேவாவை கைது செய்துள்ளனர். பின் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று அருண்குமார் கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது தேவா காவல்துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்ததில் நான், ஹரிகிருஷ்ணன், அருண்குமார் மற்றும் சக நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது வழக்கம். இந்நிலையில் கடந்த 25-ஆம் தேதி ஒன்றாக சேர்ந்து மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்று விட்டோம். ஆனால் சிறிது நேரத்தில் ஹரிகிருஷ்ணன் இறந்துவிட்டதாக எங்களுக்கு செய்தி வந்தது. அதனால் நாங்கள் ஹரிகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று விசாரித்த போது அவன் எப்படி இறந்தான் என தெரியவில்லை.

பின்னர் ஹரிகிருஷ்ணன் இறந்தது குறித்து தீவிரமாக விசாரித்த போது அவனின் சாவுக்கு அருண் குமார் தான் காரணம் என எங்களுக்கு தெரியவந்த நிலையில் அருண்குமாரை கொலை செய்ய திட்டமிட்டு அவருடன் மது அருந்தி வந்தோம். அப்போது கடந்த 1-ஆம் தேதி அருண்குமாரை அதிகமாக முட்புதர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்று அவனிடம் ஹரிகிருஷ்ணனின் சாவு குறித்து கேட்ட போது அவன் முன்னுக்கு பின் முரணாக பேசியதால்  கோபமடைந்த நான் கையில் வைத்திருந்த கத்தியால் கை, கழுத்து என அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவாகி விட்டேன் என்று வாக்குமுலத்தில் தேவா கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கைதான தேவாவை காவல்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |