Categories
உலக செய்திகள்

இந்திய பயணிகளுக்கு புதிய விதிமுறைகள்.. துருக்கி அரசு வெளியிட்ட தகவல்..!!

துருக்கி அரசு, இந்திய மக்களுக்கு கொரோனா தொற்று காரணமாக புதிய விதிமுறைகளை விதித்துள்ளது.

சீனாவில் கடந்த வருடத்தில் கண்டறியப்பட்ட கொரோனா, தற்போது வரை பரவிக்கொண்டு தான் இருக்கிறது. கொரோனா, பல்வேறு நாடுகளிலும் உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. எனவே, கொரோனா தொற்றிலிருந்து தங்களை காக்க, மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்கிறார்கள்.

மேலும், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், துருக்கிக்கு வரும் இந்திய மக்களுக்கு புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்திய மக்கள் துருக்கிக்கு வந்தால், கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழை காண்பிக்க வேண்டும். மேலும், 2 வாரங்களுக்கு, மக்கள்  தனிமைப்படுத்தவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமன்றி, 2 தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |