Categories
உலக செய்திகள்

எந்த மாதத்தில் நடைபெறும்..? இந்தியா-அமெரிக்கா டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தை… வெளியான முக்கிய தகவல்..!!

வெளியுறவு செயலாளர் ஹர்ஷவர்த்தன் சிரிங்கலா இந்த வருடம் நவம்பர் மாதத்தில் இந்தியா-அமெரிக்கா இடையிலான டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்சவர்த்தன் சிரிங்லா வருகின்ற நவம்பர் மாதத்தில் அமெரிக்காவில் இந்திய-அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஹர்ஷவர்த்தன் சிரிங்லா வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி மாளிகையின் உயரதிகாரிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கிடையிலான டூ ப்ளஸ் டூ பேச்சுவார்த்தை நவம்பர் மாதத்தில் நடத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இருப்பினும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தேதிகள் குறித்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தனது அமெரிக்க பயணத்தின் போது ஹர்ஷவர்த்தன் கூறியுள்ளார்.

Categories

Tech |