Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெளியே நின்ற குடும்பத்தினர்…. வீட்டில் கேட்ட பயங்கர சத்தம்…. உடைந்து நாசமான பொருட்கள்…!!

தொழிலாளியின் வீட்டு மேற்கூரை ஓடுகள் நொறுங்கி விழுந்து விட்டது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் பகுதியில் மாற்றுத்திறனாளியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் முருகனின் குடும்பத்தினர் காலை 7 மணியளவில் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அவரது வீட்டு மேற்கூரை ஓடுகள் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்து விட்டது. மேலும் வீட்டு சுவரும் இடிந்து விழுந்ததால் அங்கிருந்த அனைத்து பொருட்களும் உடைந்து விட்டது. அந்த சமயம் முருகனின் குடும்பத்தினர் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Categories

Tech |