தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூர் பகுதியில் முஜிபர் ரஹ்மான் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முஜிபர் ரகுமான் கோவை அரசு மருத்துவமனைக்கு அருகில் பிரபாகரன் என்பவரை கத்திமுனையில் மிரட்டி பணம் பறித்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் முஜிபர் ரஹ்மானை கைது செய்துள்ளனர்.
மேலும் இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருக்கின்றது. இதனை அடுத்து தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் முஜிபர் ரஹ்மானை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் காவல்துறையினர் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.