Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுவனை மிரட்டிய வாலிபர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

சிறுவனை மிரட்டி வாலிபர்  3 1/2 லட்சம் ரூபாயை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் பகுதியில் தொழிலதிபரான ஜிதேந்தர் மேத்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் காமராஜர் நகரில் பிளைவுட் கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இரவு நேரத்தில் ஜிதேந்தர் மேத்தாவின் 10 வயது மகனான ரிஷப் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு சென்ற 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சிறுவனிடம் உனது அப்பா கடையின் லெட்டர் பேடை வாங்கி வருமாறு என்னை அனுப்பியுள்ளார் என ஹிந்தியில் கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த சிறுவன் லெட்டர் பேடை தேடி கொண்டிருந்த சமயத்தில் மேஜை மீது கட்டுக்கட்டாக பணம் இருப்பதை அந்த வாலிபர் பார்த்துள்ளார்.

அதன் பிறகு திடீரென சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து சிறுவனின் கழுத்தில் வைத்து சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என அந்த வாலிபர் மிரட்டியுள்ளார். இதனை தொடர்ந்து ஒரு பையில் பணத்தை எடுத்து விட்டு சிறுவனை அறையில் வைத்து பூட்டி விட்டு அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அதன் பின் வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 1/2 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற வாலிபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |