நடிகை பூஜா ஹெக்டே ‘பீஸ்ட்’ படப்பிடிப்பிற்காக தயாராகும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, விடிவி கணேஷ், ஷைன் டாம் ஷாக்கோ, அபர்ணா தாஸ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
#PoojaHegde getting ready for her shot. Without break, shoot happening in brisky Mode…
#Beast @actorvijay @hegdepooja pic.twitter.com/98yYRV9eua
— #GOAT Movie (@GOATMovOff) September 4, 2021
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படப்பிடிப்பிற்காக தயாராகும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.