லண்டனில், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் குழு, சில எரிபொருள் நிறுவனங்களுடன் உள்ள கூட்டணியை துண்டிக்க வேண்டும் என்று நேற்று நிர்வாணமாக போராட்டம் நடத்தியுள்ளனர்.
பிரிட்டனில் காலநிலை மாறுபாடு, சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் ஆபத்துகளை உண்டாக்கும் அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து Extinction Rebellion என்ற ஒரு அகிம்சைவழி சிவில் ஒத்துழையாமை இயக்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. XR என்று அழைக்கப்படுகின்ற இந்த இயக்கமானது, கடந்த 2018 ஆம் வருடத்திலிருந்து இயங்குகிறது.
இந்த அமைப்பை சேர்ந்தவர்கள், அரசின் பல திட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்நிலையில், இந்த அமைப்பை சேர்ந்த சில சுற்றுச்சுழல் ஆர்வலர்கள், லண்டனில் இருக்கும் HSBC என்ற வங்கியின் வளாகத்தில் நேற்று ஆடைகளின்றி நிர்வாணமாக புகுந்து போராட்டம் நடத்தினர். மேலும், நகரின் பல்வேறு வங்கிகளுடைய வாசலில் இந்த போராட்டம் நடந்துள்ளது.
அதாவது, புதைபடிவ எரிபொருள் நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ள வங்கிகள், அவற்றுடனான உறவை துண்டிக்க வேண்டும் என்று கோரி போராடியுள்ளனர். மேலும், அவர்கள் முகக்கவசம் மட்டும் அணிந்திருந்துள்ளார்கள். ‘Blood Money’, ‘Stop Funding Death’ மற்றும் ‘Morally Bankrupt’ போன்ற வாசகங்களையும் தங்களின் உடலில் எழுதியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.