பள்ளிக்குள் புகுந்து கணிப்பொறியை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோட்டைமேட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் பள்ளியின் வெளிப்புறத்தில் உள்ள ஜன்னல் கம்பியை வளைத்து அலுவலகத்திற்கு உள்ளே நுழைந்துள்ளனர். இதனையடுத்து அலுவலகத்தில் இருந்த கணிப்பொறி மற்றும் அதனை சார்ந்த பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துமாரி உடனடியாக கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பள்ளிக்குள் நுழைந்து கணிப்பொறியை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.