நடுவானில் விமானம் பறந்து கொண்டிந்த போது மயங்கிய பச்சிளங்குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் கூறிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூலையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதனால் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக மக்கள் அனைவரும் காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு நாட்டு படைகளும் தங்கள் சொந்த நாட்டு மக்களை மீட்டு விமானங்கள் மூலம் வெளியேற்றி வந்துள்ளனர். அந்த வகையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் சொந்த நாட்டு மக்களை மட்டும் இல்லாமல் ஆப்கனிஸ்தர்களையும் காபூலில் இருந்து வெளியேற்றியுள்ளனர். அவ்வாறு காபூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட மீட்பு விமானம் மூலம் பச்சிளங்குழந்தையுடன் ஆப்கானை விட்டு வெளியேறிய ஒரு குடும்பத்தினர் ஜேர்மனியில் உள்ள அமெரிக்காவின் Ramstein விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் அந்த குடும்பத்தினர் Ramstein விமான நிலையத்திலிருந்து C-17 விமானத்தில் அமெரிக்காவிற்கு பயணித்துள்ளனர்.
இந்நிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஆப்கானிஸ்தானை சேர்ந்த 9 மாத பெண் குழந்தை விமானத்தில் மயங்கியுள்ளது. இதனைக் கண்ட விமான குழுவினர் உடனடியாக மருத்துவர்களின் உதவி வேண்டும் என கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து C-17 விமானம் Philadelphia விமான தளத்தில் தரையிறங்கியுள்ளது. அதன்பின் உடனடியாக Philadelphia-வில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு மயங்கி விழுந்த குழந்தையையும் அவரது தந்தையையும் அழைத்து சென்றுள்ளனர். அதாவது மருத்துவமனையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு மருத்துவர்கள் சொன்னதை கேட்டு அந்த குழந்தையின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.