கஞ்சா விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரை நேரு பகுதியில் ஜான்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்மூர் சாலை பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை போல் பொன்னை அருகாமையில் இருக்கும் குறவன்குடிசைப் பகுதியில் வசிக்கும் பாலு என்பவர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் முன்பாக கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் 2 பகுதிகளிலும் கஞ்சா விற்பனை செய்த பாலு மற்றும் ஜான்சன் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.