அஸ்வின் நடிப்பில் உருவாகி வரும் என்ன சொல்ல போகிறாய் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் அஸ்வின். தற்போது இவர் ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இயக்குனர் ஹரிஹரன் இயக்கும் இந்த படத்தில் தேஜு அஸ்வினி, அவந்திகா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு விவேக்- மெர்வின் இசையமைக்கின்றனர்.
#EnnasollaPogirai pic.twitter.com/kULjMhaH0l
— Vivek Siva (@iamviveksiva) September 3, 2021
இந்நிலையில் என்ன சொல்ல போகிறாய் படத்தின் பாடல் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக விவேக்-மெர்வின் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் .