திராவிடர் தமிழர் கட்சியினர் கையில் திருவோடு ஏந்தியவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்றுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திராவிடர் தமிழர் கட்சியினர் கையில் திருவோடு ஏந்தியவாறு சென்றுள்ளனர். அதன்பின் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் அரசின் முடிவால் பல்வேறு மக்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது எனவும், அரசு அந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.